முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலாவில் அரசியல் வன்முறை போராட்டம்: 16 பேர் உயிரிழப்பு தற்காலிக அதிபராக சபாநாயகர் பிரகடனம்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

காரகாஸ், வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், புதிய தேர்தலை நடத்த வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது. அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக  பிரகடனம் செய்துள்ளார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து