முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பில் அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரனைப் பின்னுக்குத் தள்ளிய கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பை டெய்லி கோஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் பதிவான 28,000 வாக்குகளில் 27 சதவீதத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் 18 சதவீதமும் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் 13 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், 12 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ், கடந்த 21-ம் தேதி அறிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அவரது தேர்தல் பிரச்சாரத்துக்காக 38 ஆயிரம் பேர் ரூ.10.6 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இந்தத் தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஹாரிஸ், நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து