காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் “ஸ்வயம் பிரபா” கல்வி அலைவரிசையின் தொடக்கவிழா

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      சிவகங்கை
24 alagappa news

காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணையவழிக் கற்றல் மையத்தின் சார்பில் ‘ஸ்வயம் பிரபா’ கல்வி அலைவரிசையின் தொடக்கவிழா  நேற்று மைய நூலக கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
 அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.ந.ராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார். அவர் தமது உரையில், ஸ்வயம் என்பது தற்சார்பு என்று பொருள் கொண்டது என்றும், மாணவர்கள் அனைவரும் சுயமாக கற்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தான் இது போன்ற வசதிகளை பல்கலைக்கழக மானியக்குழு உருவாக்கி வருகிறது எனத் தெரிவித்தார். இந்த  ஸ்வயம் பிரபா தொலைக்காட்சி அலைவரிசையில் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய வல்லுநர்கள் தங்களது விரிவுரைகளை வழங்கி வருகின்றனர்.  இது போன்ற அறிஞர்களின் விரிவுரைகள் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களும் தங்களது பாடம் சார்ந்த நவீன நுணுக்கங்களை தெரிந்து கொண்டு அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவி புரியும் என்றும் தெரிவித்தார்.
 அவர் மேலும் பேசுகையில், மாணவர்கள் ஸ்வயம் இணையவழிக் கற்றல் மூலம் படிப்பதற்கு, தங்களைப் பதிவு செய்து கொண்டு அதன்மூலம் குறிப்பிட்ட காலஅட்டவணையின்படி கற்றுக்கொண்டால் அதன் மூலம் பெறப்படும் மதிப்பெண்கள் (ஊசநனவை வுசயளெகநச) தாங்கள் படிக்கும்பொழுது அதற்கு இணையான பாடத்திற்கான தேர்வை எழுதவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இதன் மூலம் பெறப்படும் (ஊசநனவை வுசயளெகநச) மதிப்பெண் புள்ளிகள் சம்மந்தபட்ட பாடத்திற்கான மதிப்பெண்களாக ஏற்றுக்கொள்ளப்படும். இது போன்ற இணைய மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை மாணவர்களுக்கு புதுமையான மற்றும் கல்வி மேம்பாட்டு அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அதனால்தான் அழகப்பா பல்கலைக்கழகத்தின் அனைத்துத்துறைகளிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த தொலைக்காட்சி அலைவரிசை நிறுவப்பட்டுள்ளது.  இந்த வசதியை மாணவர்கள் பயன்படுத்தி பலன் பெறவேண்டும் என்றார்.  அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 5500 மாணவர்களும் இந்த ஸ்வயம் இணைய வழிக் கற்றலில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
 முன்னதாக இவ்விழாவில் இணைய வழிக்கற்றல் ஒருங்கிணைப்பாளர் சி.பாஸ்கரன் வரவேற்று விழாவிற்காக ஏற்பாடுகளை செய்திருந்தார் .துணை ஒருங்கிணைப்பாளர் பு.ராமலிங்கம் நன்றி கூறினார். இவ்விழாவில் அனைத்துத்துறை பேராசிரியர்கள், ஸ்வயம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து