முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கலெக்டருக்கு பூக்கள் கொடுத்து வரவேற்ற மாணவிகள்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் நேசனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பாக மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்  தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த  மாவட்ட கலெக்டரை பள்ளியில் பயிலும்  பெண் குழந்தைகள் ரோஜா மலர் கொடுத்து வரவேற்றனர்.  அதன் பின்பு, பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்திடும் விதமாக மாவட்ட கலெக்டர் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுடன் கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கினார்.  தொடர்ந்து, பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்து சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்பு வழங்கிட வேண்டுமென்ற எண்ணத்தை வலியுறுத்தும் விதமாக சமாதானப் புறாவை பறக்க விட்டார்.
 அதன் பின்பு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:- பெண் குழந்தைகளை போற்றி கவுரவிக்கும் விதமாக, பெண் குழந்தைகளுக்கான உரிமையினை உறுதி செய்திடும் நோக்கில் ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் நாள் தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  சமுதாயத்தில் உள்ள அனைத்து தளங்களிலும் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வது நாம் அனைவரது கடமையாகும்.  சமுதாய வளர்ச்சிக்கு பாலின சமநிலை என்பது அவசியமாகும்.  அந்த வகையில் பெண் குழந்தைகள் மற்றும் மகளிரின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  பெண்களுக்கெதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தடுத்திடும் விதமாக சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார்.
 இவ்விழாவில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்  பெ.கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் எஸ்.துரைமுருகன் உட்;பட அரசு அலுவலர்கள், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து