முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா உருவில் பொதுமக்கள் இந்திரா காந்தியைக் காண்பார்கள் - சிவசேனா கட்சி வரவேற்பு

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : பிரியங்கா காந்தியின் வருகையை பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா வரவேற்றுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகளும், கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். சோனியா, ராகுல் ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி, அமேதியில் மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தீவிர அரசியலுக்கு பிரியங்கா வர வேண்டும் என்று காங்கிரசார் வலியுறுத்திய போதும் அவர் அதை ஏற்கவில்லை. இதனிடையே பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக கட்சித் தலைவர் ராகுல் நியமித்துள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலுக்கு பிரியங்கா வந்துள்ளார்.

இந்நிலையில் நேரடி அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தியின் வருகையை பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா வரவேற்றுள்ளது. இதுகுறித்துப் பேசிய சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷா கயாண்டே,

பிரியங்கா காந்தியின் சிறந்த ஆளுமையால், காங்கிரஸ் பயனடையும். பிரியங்கா தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம், வாக்காளர்களின் மனதைக் கவரும் அவரின் திறன் ஆகியவை காங்கிரஸ் கட்சிக்குக் கைகொடுக்கும். மக்கள் அவரின் உருவில் இந்திராவைக் காண்பர். இது வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க உதவும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து