முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் - நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு தகுதி

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் சிட்ஸிபஸை நேர்செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரபோல் நடால்.

இறுதிப் பேட்டிக்கு...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், பெடரரை தோற்கடித்த இளம் வீரரான கிரீஸின் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொண்டார்.

நடாலின் அதிரடிக்கு சிட்ஸிபஸ்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-2 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-0 எனவும் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் பேட்டிக்கு முன்னேறினார் நடால். இந்த ஆட்டத்தில் நடால் ஒரு கேம்ஸை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடால் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது பவுலி ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள இருக்கிறார்.

நவோமி ஒசாகா...

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள். முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என  அதிரடியாக கைப்பற்றினார்.

பெட்ரா கிவிட்டோவா...

வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி பிளிஸ்கோவாவை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து