முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவின் புதிய மன்னர் வரும் 31-ல் பதவியேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர், மலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்லா சுல்தான் அஹமது ஷா வரும் 31-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

மலேசியாவில் மன்னரின் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் மற்றும் துணைப் பிரதமரே நாட்டை நிர்வகிப்பர். மலேசியாவில் 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். இக்குடும்பத்தை சேர்ந்தவர்களே, சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக தேர்வு செய்யப்படுகின்றனர்.

2016-ல் மன்னராக பதவியேற்ற ஐந்தாம் சுல்தான் முஹம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த மிஸ் மாஸ்கோ பட்டம் வென்ற அழகியை மணம் புரிந்த சர்ச்சையில், அவரது பதவிக்காலம் முடியும் முன்னர், கடந்த 6-ம் தேதி பதவி விலகினார்.

இதையடுத்து அடுத்த மன்னரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. புதிய மன்னராக அப்துல்லா சுல்தான் அஹமது ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16-வது மன்னராக வரும் 31-ம் தேதி பதவியேற்க உள்ளார். உலக கால்பந்து அமைப்பான பிபா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் இவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து