முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்: பா.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தகவல்

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தால் 60 சதவீதம் பேர் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது பாரதிய ஜனதாவா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என்ற எதிர் பார்ப்பு வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்று இந்தியா டுடே நிறுவனம், கார்வி இன்சைட்ஸ் ஒன்று நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 எம்.பி. இடங்களில் 272 இடங்களை கைப்பற்றும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இந்த 272 இடங்களை எந்த கட்சியாலும் எட்டி பிடிக்க இயலாது என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிவில் தொங்கு பாராளுமன்றம்தான் அமையும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்தியா டுடே கருத்து கணிப்புபடி பா.ஜ.க. கூட்டணிக்கு மொத்தமுள்ள 543 இடங்களில் 237 இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு 323 இடங்கள் கிடைத்து இருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் வருகிற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு 86 இடங்கள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 166 இடங்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 106 இடங்களே கிடைத்து இருந்தன. வருகிற தேர்தலில் கூடுதலாக 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார் என்பதை தீர்மானிக்கும் கிங் மேக்கர்களாக மாநில கட்சிகள் திகழும் என்று கருத்து கணிப்பில் சூசகமாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறாத மாநில கட்சிகளுக்கு சுமார் 140 இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 140 இடங்களை வைத்துக் கொண்டு மாநில கட்சிகள் மத்திய அரசில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. மாநில கட்சிகளில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றிருக்கிறதோ அந்த கட்சிக்கு அதிக மதிப்பு உருவாகும் என்று தெரிய வந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் மத்தியில் புதிய கூட்டணி அரசு உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்தியா டுடே

இந்தியா டுடேவின் கருத்து கணிப்பில் இப்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தால் எந்த கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 60 சதவீதம் பேர் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளனர். 32 சதவீதம் பேர் காங்கிரஸ் கூட்டணி ஆ
ட்சிக்கு வரும் என்று கூறி உள்ளனர். 8 சதவீதம் பேர் கணிக்க இயலவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
மண்டல வாரியாக வாக்குகள் எந்த கட்சிக்கு அதிகம் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே கருத்து கணிப்பு ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது. அதில் வட மாநிலங்களில் 40 சதவீதம் பேர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். காங்கிரசுக்கு வட மாநிலங்களில் 23 சதவீத ஆதரவே உள்ளது.

தென் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு சுத்தமாக ஆதரவு இல்லை. 18 சதவீத ஆதரவுதான் தென் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு தென் மாநிலங்களில் 43 சதவீத ஆதரவு இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 78 இடங்களை காங்கிரஸ் வெல்லும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அசாம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய கிழக்கு மண்டலத்தில் பா.ஜ.க.வுக்கு 37 சதவீத ஆதரவும், காங்கிரசுக்கு 25 சதவீதம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா டுடே போலவே ஏ.பி.பி. நியூஸ், சிவோட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தி உள்ளன. அந்த கருத்து கணிப்பிலும் தொங்கு பாராளுமன்றம் தான் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏ.பி.பி. நியூஸ்

ஏ.பி.பி. நியூஸ் கருத்து கணிப்புப்படி பா.ஜனதா கூட்டணிக்கு 233 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 167 இடங்களும், மாநில கட்சிகளுக்கு 143 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பிலும் மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொதுமக்களிடம் காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி, அகிலேஷ் மற்றும் மாநில கட்சிகள் இணைந்தால் முடிவு எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு 80 சதவீதம் பேர் மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் காங்கிரஸ் கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் மாநில கட்சிகள் ஒருங்கிணையும் பட்சத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்பதும் இரண்டு கருத்து கணிப்புகளிலும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தில் காங்கிரசுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்தால் பா.ஜனதா நொறுங்கி போகும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு 5 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய 3 கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் அந்த கூட்டணிக்கு 75 இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரசுடன் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டணி சேராமல் தனி அணியாக போட்டியிட்டால் அவர்களுக்கு 58 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பா.ஜனதாவுக்கு 18 இடங்களே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரசுக்கு 4 இடங்களே கிடைக்கும். இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் இந்த தடவை 55 தொகுதிகளை பா.ஜ.க. இழக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் உத்தரபிர தேசத்தில் தேர்தல் கூட்டணிகளில் மாற்றம் உருவாக வாய்ப்பு இருப்பதாக எதிர் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து