முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான இன்று நடக்கும் 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா?

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மவுண்ட் மான்கனூயி : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியைப்போல், இன்று நடைபெறும் 2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியா முன்னிலை...

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை, முதல் போட்டியில் 75 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

கோலிக்கு ஓய்வு...

முதல் போட்டியில் ரோகித் சர்மா சொதப்பினாலும் அவருக்கான வாய்ப்பு அணியில் உள்ளது. கேப்டன் விராட்கோலிக்கு கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில்தான் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஷூப்மன் கில்-க்கு 2-வது போட்டியில் வாய்ப்பில்லை. அம்பதி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர். வேகப்பந்து வீச்சில் முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் ஃபார்மில் உள்ளனர். அதனால், ரவீந்திர ஜடேஜா பெஞ்சில்தான் உட்கார வேண்டும்.

ராகுல் - பாண்ட்யா...

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான தடையை பி.சி.சி.ஐ. நீக்கியது. இருப்பினும், 2-வது போட்டியில் இவர்கள் பங்கேற்பது சந்தேகம். ஹர்திக் பாண்டியா இடத்தில், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் தொடருவார். ஒரு வேளை, 3-வது போட்டியில் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில், அதே அணியே களமிறக்கும் என தெரிகிறது.

நியூசிலாந்து அணி, முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், 2-வது போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து