முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, கொடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 

கொடநாடு விவகாரம் தொடர்பாக தெகல்கா இணைய தள முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.  அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் எதுவும் இல்லை. மனுதாரர்  பத்திரிகை மற்றும் டி.வி.சேனல்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று முடிவு செய்கிறோம். ஆகவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது. அதனால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து