முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதி: நடால் - ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் லூகாஸ் பவுலியை நேர்செட் கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அவர் நடாலை எதிர்கொள்கிறார்.

நேர் செட்டில் வெற்றி...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் பிரான்சின் லூகாஸ் பவுலியை எதிர்கொண்டார். நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் ஆட்டத்திற்கு 28-ம் நிலை வீரரான லூகாஸ் பவுலியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 2-ம் நிலை வீரரான நடாலை எதிர்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து