முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்களுக்கு பிடித்தமான காதலனை தேர்வு செய்ய லீவு: சீனா ஏற்பாடு

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : தங்களுக்கு பிடித்தமான காதலனை தேர்ந்தெடுக்க விடுமுறை அளிக்க சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்காக சீன அரசும் சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் ஸ்டேட்டஸில் சிங்கிள் என்று யாரெல்லாம் போட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சீன அரசு நிறைய சலுகைகளை தர முன்வந்துள்ளது. அதன்படி, 2 நிறுவனங்கள் இதற்கான முதல்படியை எடுத்து வைத்தள்ளன. ஹாங்சௌ என்ற பகுதியில் வரலாற்று பின்னணியிலான சுற்றுலா பூங்காவில் உள்ள இந்த 2 நிறுவனங்கள் 30 வயதுகளில் இருக்கும் கல்யாணமாகாத பெண்களுக்கு டேட்டிங் விடுமுறை வழங்குவதாக சௌத் சைனா போஸ்ட் தெரிவித்துள்ளது.

அதாவது பெண்கள் இந்த விடுமுறையை பயன்படுத்தி, தங்களுக்கு பிடித்தமான காதலனை தேடி கொள்ள வேண்டும். மனசுக்கு பிடித்தமான காதலனை தேர்ந்தெடுக்கவே இந்த லீவு அவர்களுக்கு விடப்பட்டுள்ளது.

எனவே இந்த டேட்டிங் விடுமுறையை பயன்படுத்தி காதலனை தேர்ந்தெடுத்து, கல்யாணமும் செய்து கொண்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று சீன அரசு நம்புகிறது. இதனை இளம் பெண்கள்  வரவேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து