முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டியுடன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மருத்துவ சட்டம் ,நன்னெறிகள் முதுகலை டிப்ளமோ படிப்பு துவக்கம்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை-   தென்தமிழ்நாட்டில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் மீனாட்சிமிஷன் மருத்துவமனை மற்றும் ஆய்வுமையம், பெங்களூருவைச் சேர்ந்த நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டியுடன் இணைந்து மருத்துவ சட்டம் மற்றும் நன்னெறிகளில் (PGDMLE) முதுகலை டிப்ளமோ கல்வி திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 
NLSIU-ன் தொலைதூர கல்வித்துறையின் வழியாக வழங்கப்படும் இந்த ஓராண்டுகால கல்வி திட்டமானது, மருத்துவம்  மற்றும் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த தொழில்முறை பணியாளர்களுக்கானது.  NLSIU -ல் ஒரு ரெகுலர் கல்வித்திட்டமாக கற்பிக்கப்பட்டு வரும் இது, தொலைதூரக்கல்வி வழியாக வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.  இதற்காக, வேலூரில் சிஎம்சி மருத்துவமனை மற்றும் மதுரையில் மீனாட்சிமிஷன் மருத்துவமனை (MMHRC) ஆகிய இரு புகழ்பெற்ற மருத்துவமனைகளுடன் NLSIU ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. 
மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவரான டாக்டர் எஸ். குருசங்கர் இதுகுறித்து கூறியதாவது: “இம்மாநிலத்தில் மருத்துவம்  மற்றும் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த தொழில்முறை பணியாளர்களுக்கு இப்பாடத்திட்டத்தை நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டியுடன் இணைந்து வழங்குவதற்காக ஒரு கூட்டுவகிப்பு செயல்பாட்டை மேற்கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.  இக்கல்வி திட்டத்தை தமிழ்நாட்டின் தென்பகுதியில் வழங்குகின்ற ஒரே கல்வி நிலையமாக நாங்கள் இருக்கிறோம்.  இன்றைய காலகட்டத்தில் மருத்துவ சட்டம் மற்றும் நன்னெறிகள் மிக மிக முக்கியமானதாக மாறியிருக்கின்றன.  ஒழுக்கம் சார்ந்த கேள்விகள் அல்லது நன்னெறி மீதான ஐயங்கள் / இக்கட்டான சூழ்நிலைகள் அல்லது மருத்துவ சிகிச்சை வழங்கல் மற்றும் நோயாளிகளது உரிமைகள் ஆகியவை தொடர்பான சட்ட வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள்  இப்போது அதிகரித்த அளவில் சந்திக்கின்றனர்.  NLSIU – தொலைதூர கல்வித்துறையின் வழியாக வழங்கப்படும் இக்கல்வித்திட்டமானது, மருத்தவசட்டம் மற்றும் நன்னெறிகள் மீதான மருத்துவத்துறை பணியாளர்களின் புரிதலை அதிகரிக்கவும் மற்றும் தங்களது பணி வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கின்ற எண்ணற்ற சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ள திறன் அதிகாரத்தை வழங்கவும்  பெரிதும் உதவும்”.                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து