முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழைபழத்தை தொலைத்த பலாபழம் காரர்கள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பற்றி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிண்டல்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      விருதுநகர்
Image Unavailable

சாத்தூர் -பலா பழத்திற்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் வாழைபழத்தை தொலைத்து விட்டனர் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் நடைபெற்றது. வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ்பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசும்போது,
இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் சிலர் பலா பழத்திற்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் வாழைபழத்தை தொலைத்து விட்டனர். மேயிர ஆட்டை பிடிக்கின்றேன் என்று சொல்லி வயிற்றில் இருக்கின்ற பிள்ளையை இழந்த கதையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் கதை உள்ளது., சாத்தூர் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் விரைவில் கல்யாண மண்டபம் அமைத்துக்கொடுப்போம். சாத்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைத்தக்கொடுக்கப்பட்டு வருகின்றது. சாத்தூார் நகராட்சிக்கு ஒருநாள்விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கி வருகின்றோம். விரைவில் தினமும் குடிநீர் வழங்குவோம். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். சாத்தூர் தொகுதி மக்கள் தங்கள் பகுதியில் எந்த அடிப்படை வசதிகள் கேட்டாலும் உடனடியாக செய்து கொடுக்கப்படும். சாத்தூர் தொகுதி மக்கள் எப்போதும் அதிமுகவிற்கு ஆதரவாக, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் சந்திரபிரபா எம்எல்ஏ., முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், தலைமை கழக பேச்சாளர்கள் திருப்பூர் இசாக், காந்திமதிநாதன், உட்பட அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன் செய்திருந்தார். கூட்டத்தில் தியாகி இசாக்கிற்கு விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக ரூ1லட்சம் நிதியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து