முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் குடியரசுதினவிழாவில் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், உதவி அலுவலர் ஆகியோருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று 70-வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலெக்டர் வீரராகவராவ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம் ஆகியோரின் பணியை பாராட்டி கலெக்டர் வீரராகவராவ் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து