முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தவறான தகவல்...

சென்னை மெரினாவில் சாரண, சாரணியர் அணிவகுப்பை ஏற்று மேடையில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கால நீர்த்தேவையை கருத்தில் கொண்டு மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினரிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசு தயார்...

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப கேட்டுக்கொண்டார். குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார்.

முதல்வருடன் சந்திப்பு...

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து