முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனவெறிக்கு எதிரான கருத்து: பாகிஸ்தான் கேப்டனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

டர்பன் : தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோவுக்கு எதிராக இனவெறிக்கு எதிரான வகையில் ஸ்லெட்ஜிங் செய்த சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டர்பனில் 2-வது போட்டி நடைபெற்றது. பாகிஸ்தான் சொற்ப ரன்களில் சுருண்டது.

தென்ஆப்பிரிக்கா சேசிங் செய்யும் போது, நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பெலுக்வாயோ சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து பெலுக்வாயோவை ஸ்லெட்ஜிங் செய்தார்.

உருது மொழியில் பேசிய சர்பிராஸ் அகமதின் வாய்ஸ், ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதற்கு அர்த்தம் தெரிந்த பின்னர் கடும் விமர்சனம் எழும்பியது. சர்பிராஸ் அகமது 3-வது போட்டி தொடங்குவதற்கு முன் பெலுக்வாயோவிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டார். இருந்தாலும் ஐ.சி.சி இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் சர்பிராஸ் அகமது விளையாட மாட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து