முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு 4 ஆண்டு சிறை

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்கு நான்கு வருடம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வழக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''சீனாவின் தடை செய்யப்பட்ட ஃபலுன் கனக் அமைப்பினைப் பின் தொடர்பவரும் மற்றும் சீனாவில் நில அபகரிப்பனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான பிரபல மனித உரிமை வழக்கறிஞரான வாங் குவன்சாங்கிற்கு (42) நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டிலும் வாங் சமூக ஆர்வலருடனும் போராட்ட நிகழ்வு ஒன்றில் கைது செய்யப்பட்டிருக்கிறார்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டனை குறித்து டியாஜின் நகர நீதிமன்றம் அரசு அதிகாரத்தை உடைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் வாங் குவன்சாங்குக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் அரசு உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது என்று தீர்பளித்துள்ளது.

வாங்குக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு அநீதி என்று சீனாவின் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும் சீனாவில் வழக்கறிஞர்களின் உரிமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து வரும் சமீபத்திய தாக்குதலையும் அவர்கள் கண்டித்துள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து