முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்பது பெருமை - துல்சி கபார்ட் சொல்கிறார்

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்பதில் பெருமை கொள்வதாக துல்சி கபார்ட் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதமாக மட்டுமே உள்ள நிலையில் கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட், 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள முதல் இந்து பெண்ணான துல்சி கபார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத வெறுப்புணர்வு மற்றும் சில ஊடகங்களின் தவறான பிரச்சாரங்களால் நான் பாதிக்கப்பட்டேன். நானும் எனது ஆதரவாளர்களும் இந்து பெயர்களை கொண்டிருப்பதால், எங்களை இந்து தேசியவாதிகள் என்று குற்றம்சாட்டினார்கள். இன்று என்னை இந்து தேசியவாதி என்று கூறியவர்கள், நாளை அமெரிக்காவில் வாழும் முஸ்லீம், யூதர்கள், ஜப்பானியர்கள், ஹிஸ்பேனியர்கள் அல்லது ஆப்பிரிக்கர்களையும் குற்றம்சாட்டலாம்.

பிரதமர் மோடியுடன் என்னுடைய சந்திப்புகள் ஆதாரமாக முன்வைக்கப்பட்டு, சந்தேகிக்கப்படுவதாக குற்றசாட்டுகள் பரவுகின்றன. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, செயலாளர் ஹிலாரி கிளின்டன், தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு எம்பிக்கள் இதுபோன்று மோடியை சந்தித்து அவருடன் பணியாற்றியிருக்கிறார்கள் என கூறினார்.

அமெரிக்க பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து பெண் என்ற பெருமையை பெற்றேன். இப்போது, அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்து பெண் என்பது பெருமையாக உள்ளது. என்று கூறினார்
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து