முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுக்கான கனடா தூதர் ராஜினாமா

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

ஒட்டாவா : சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.    

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகளும், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கடந்த மாதம் 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சீனாவுக்கான கனடா நாட்டு தூதர் ஜான் மெக்கலம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ஜஸ்டின் டிரிடியு கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் பதவியில் இருந்து விலகினார். இது குறித்து ஜஸ்டின் டிரிடியு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “நான் ஜான் மெக்கலமை பதவி விலகும்படி கேட்டு கொண்டேன். அவரின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து