முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலையில் இறங்கி போராடுவது அழகல்ல: போராடும் ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் - தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்பவும் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சாலையில் இறங்கி போராடுவது அழகல்ல என்று போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நீதிபதி கேள்வி ?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். "ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படும். போராட்டம் நடத்துவதற்கு தேர்வுகாலம் தான் சரியான நேரமா ? மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா ? சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகல்ல. மற்ற மாநிலங்களில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறதா ? தனியார் பள்ளியில் பயிலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கக்கூடாது என கூறினால் ஏற்பீர்களா ? என ஆசிரியர்களுக்கு ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

வசைபாடுவது சரியா?

தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பெறும் சம்பளம் மிகவும் குறைவு. ஸ்விகி உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனத்தில் பட்டதாரிகள் பலர் பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு எத்தனை பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள் தெரியுமா?. அரசியல்வாதிகளை வசைபாடும் ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகளை உணர்ந்து பார்க்க வேண்டும். வேலைநிறுத்தம் செய்யும் சங்க நிர்வாகிகள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களை வசைபாடுவது சரியா?. உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர்களை வலியுறுத்துகிறேன்" என நீதிபதி கிருபாகரன் கூறினார்.

மேலும் இது தொடர்பான வழக்கில், நாளை பதிலளிக்க ஜாக்டோ-ஜியோவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஐகோர்ட் கிளை மறுப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று  மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில்,  ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ தரப்பில், 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்திய பின்பு நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய பாக்கியை அரசு தர உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சில தகவல்களை கேட்டறிந்துவிட்டு விசாரணையை சிறிது நேரம் ஒத்தி வைத்தனர்.
 

உத்தரவிட வேண்டும்...

அதன்பின், மீண்டும் விசாரணை தொடங்கியபோது, அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தைக்கு நேரமில்லை, உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதிகள் அரசும் ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளனர். ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு கேட்டுள்ளனர் என தெரிவித்தனர். அதற்கு ஜாக்டோ - ஜியோ தரப்பில், 21 மாத சம்பள பாக்கியையாவது தர உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.

உத்தரவு பிறப்பிக்க...

அதற்கு நீதிபதிகள், தனிநபர் தொடர்ந்த வழக்கில் நீங்கள் கேட்பதுபோன்று உத்தரவிட முடியாது. அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக நீங்கள் கொடுத்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளீர்கள். இதனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனக்கூறி வழக்கை பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களை கண்டித்து ஈரோட்டில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து