முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வாழைக்காய் வரத்து அதிகரிப்பு

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

 

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைக்காய் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான விருப்பாட்சி, கேதையுறம்பு, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, வத்தலகுண்டு, சோழவந்தான் ஆகிய பகுதிகளிலிருந்து வாழைத்தார்கள்வ விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சென்ற வாரங்களில் பொங்கல், தைப்பூசம் என பண்டிகை நாட்களாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்ற வாழைத்தார். தற்போது கிலோ ரூ.20-க்கு விற்பனையாகுகிறது. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இருந்து பெருமளவு காய்கறிகள் கேரளா மற்றம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வாழைத்தார்கள் அனைத்து காலங்களிலும் விற்பனைக்காக வருவதால் இதற்கு நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து