முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசியி நகராட்சியில் பொதுமக்கள் பாதிக்காத பகுதியில் பசுமை உரக்குடில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2019      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி.   சிவகாசியி நகராட்சியில் பொதுமக்கள் பாதிக்காத பகுதியில் பசுமை உரக்குடில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
சிவகாசி  நகராட்சியில் மக்கும் தன்மை உடைய குப்பைகளை உரமாக தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.6.19 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய நிதிக்குழு மானிய நிதி 35 சதவீதம், மாநில நிதிக்குழு மானிய நிதி 55 சதவீதம், நகராட்சி பொதுநிதி 10 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் நேருகாலனி, விஸ்வநத்தம் நகராட்சி மார்க்கெட், பிகேஎஸ்ஏ ஆறுமுகம் ரோடு, விளாம்பட்டி  ரோடு, வெள்ளையாபுரம் ரோடு ஆகிய இடங்களில் ரூ.45 லட்சம் மதிப்பில் பசுமை உரக்குடில் மற்றும்  சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சில பகுதிகளில் பசுமை உரக்குடில் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பசுமை உரக்குடில் அமைக்கும் பகுதிகளான தட்டா ஊரணி, வெள்ளையாபுரம் ரோடு கமாக் பார்க், பள்ளபட்டி ஊராட்சியில் நேருகாலனி, நகராட்சியில் அம்பேத்கார் சிலை பின்புறம் ஆகிய பகுதிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பசுமை உரக்குடில் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தட்டா ஊரணி, வெள்யைாபுரம் சாலை கமாக் பார்க், நேருகாலனி பகுதிகளில்   பசுமை உரக்குடில் அமைக்கப்படாது என்றும் மாறாக வேறு பகுதிகளில் அந்த பசுமை உரக்குடில் அமைக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தட்டா ஊரணியை செம்மை படுத்தி நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெள்யைாபுரம்சாலை கமாக்பார்க்கில் விளையாட்டு கூடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேரு காலனியில் திருமணம் மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் அமைச்சர் உறுதியளித்தார். அமைச்சரின் உறுதிமொழியை தொடர்ந்த பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர். நிகழ்ச்சியின்போது, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ஸ்ரீனிவாசன், சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சங்கரநாராயணன், பள்ளபட்டி ஊராட்சி செயலாளர் லெட்சுமனபெருமாள், அதிமுக நகர செயலாளர் அசன்பதூரூதின், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணா, ஆரோக்கியம், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் திருமுருகன், முனீஸ்வரன், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை,  நிர்வாகிகள் சங்கர், ஆட்டோ பெரியசாமி, கார்த்திக், யுவராஜ், தங்கபாண்டி, மெட்ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து