இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      சினிமா
Ilayaraja 75 concert 2019 01 31

சென்னை : தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளைராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.  

இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்காக பிரம்மாண்ட மான இசை நிகழ்ச்சி வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். 

2-ந் தேதி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, சாயிஷா, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், கோவை சரளா, ராதா, கார்த்திகா, ஆண்ட்ரியா, தமன், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் பங்கேற்று நடனமாடி, பாடல்கள் பாடி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து