முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு செய்த துரோகத்துக்கு தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய அரசில் தி.மு.க. பங்கு வகித்தபோது, தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் செய்த துரோகத்துக்கு தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும். கிராம மக்களை தி.மு.க.வினர் சந்திப்பது ஏமாற்று வேலை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஓ.பி.சி. பிரிவின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமை தாங்கினார். அப்பிரிவின் தேசிய செயலாளர் நந்தகுமார் யாதவ் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்பான ஏற்பாடு...

இந்த நிகழ்ச்சியின்போது மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ம் தேதி திருப்பூருக்கு வருகிறார். கன்னியாகுமரியில் 19-ம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். 2 நிகழ்ச்சிகளுக்கான பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

மன்னிப்பு கேட்க...

மத்திய அரசில் தி.மு.க. பங்கு வகித்தபோது, தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் செய்த துரோகத்துக்கு தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும். கிராம மக்களை தி.மு.க.வினர் சந்திப்பது ஏமாற்று வேலை. மத்திய ‘பட்ஜெட்’ நாட்டு மக்களுக்கு நன்மை, பலன் தரக்கூடிய முழு ‘பட்ஜெட்’ ஆக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து