முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, தொழில் உரிமம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் அனுமதி

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

   மதுரை,-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.81, 82 பகுதி பொதுமக்களுக்காக ஞாயிற்;றுக்கிழமை சந்தை வார்டு அலுவலகத்தில் சிறப்பு முகாம்   நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, தொழில் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், தொழில் வரி விதித்தல் ஆகியவற்றை பொதுமக்களுக்கு உடனுக்குடன் வழங்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் மண்டலம் எண்.4க்கு உட்பட்ட வார்டு எண்.81 தமிழ்ச்சங்கம் ரோடு, வார்டு எண்.82 சொக்கநாதர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சந்தை வார்டு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 3 மனுக்களும், சொத்து வரி பெயர் மாற்றம் வேண்டி 26 மனுக்களும், தொழில் உரிமம் வேண்டி 4 மனுக்களும், காலிமனை வரி வேண்டி 13 மனுக்களும், வரிப்பிரிவினை வேண்டி 1 மனுவும், புதிய தொழில்வரி வேண்டி 1 மனுவும், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டி 9 மனுக்களும், இதர கோரிக்கை வேண்டி 4 மனுக்களும் என மொத்தம் 61 மனுக்கள் பெறப்பட்டு உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணம் செலுத்திய 48 மனுதாரர்களுக்கு உடனுக்குடன் அனுமதி ஆணை இன்று வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு உரிய ஆவணங்கள் பெறப்பட்ட பிறகு உரிய அனுமதி ஆணை வழங்கப்படும்.
இம்முகாமில் பொதுமக்களின் வசதிக்காக விண்ணப்பபடிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யும் படிவங்களுக்கு உண்டான கட்டணம் உடனே செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. படிவங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த பதாகையும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பணி மேற்கொள்ளும் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட பிளம்பர்களின் விபரப்பட்டியல் அடங்கிய பதாகையும் வைக்கப் பட்டிருந்தது.
 இம்முகாமில் உதவி ஆணையாளர்  .பிரேம்குமார், நகர்நல அலுவலர் மரு.சதிஷ்ராகவன், உதவி ஆணையாளர் (வருவாய்)  ஆ.ரெங்கராஜன், செயற்பொறியாளர்  சேகர், சுகாதார அலுவலர்  .ராஜ்கண்ணன், கண்காணிப்பாளர் .ராஜ்குமார், உதவிப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து