முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எஸ்.ஜி -யில் இந்தியா இணைய சீனா தொடர்ந்து தடை

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்தியா அணுசக்தி விநியோக நாடுகளில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் கூட்டமைப்பில் இணையட்டும் என்று சீனா விமர்சித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிங் ஷுஹாங் கூறுகையில், நாங்கள் என்.பி.டி. அமைப்பின் விதிமுறையை தொடர்ந்து நிலை நாட்டுவோம். அதன் இலக்கை எட்டுவோம். அதுதான் அதிலுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு. சர்வதேச பாதுகாப்புக்கு இது மிக முக்கித்துவம் வாய்ந்தது என்று கருதுகிறோம்.

அணுஆயுத பரவல் தடை ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இந்தியா, அணுசக்தி விநியோக நாடுகளில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் கூட்டமைப்பில் இணையட்டும் என்றார். முன்னதாக, என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக சேர்க்கக் கோரி கடந்த சில வருடங்களாக இந்தியா வலியுறுத்தி வருகிறது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத காரணத்தால், இந்தியாவை என்.எஸ்.ஜி.யில் சேர்க்க சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் தொடர்ந்து இந்தியா பிரான்ஸ் போன்ற நாடுகள் என்.பி.டி.யில் கையெழுத்திடாமல் என்.எஸ்.ஜி.நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது எனவே இந்தியாவுக்கு இதே அடிப்படையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறது.இந்த நிலையில் 48 நாடுகள் உள்ள இந்த அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தாலும் சீனா தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து