முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழக இதயதெய்வங்களின் ஆன்மாவின் கட்டளைபடி முதல்வரும் துணை முதல்வரும் செயல்படுகின்றனர் வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -கழக இதயதெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மாவின் கட்டளையின்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர் என வேடசந்தூர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்;டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் புகழாரம் சூட்டி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பாளையத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கழக கொள்ளை பரப்பு செயலாளரும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை சிறப்புரையாற்றினார். ஒன்றிய கழக செயலாளர் மலர்வண்ணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கழக பொருளாளர் உதயகுமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, தலைமைக் கழக பேச்சாளர்கள் மாணிக்கம், பொன் ஸ்ரீராம், எரியோடு நகர செயலாளர் அறிவாளி, ஆகியோர் பேசினர்.
கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை வகித்து பேசியதாவது
இன்றைய தினம் தமிழகம் முழுவதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. அவரை தமிழக மக்கள் நடிகராக பார்க்க வில்லை. அரசியல் தலைவராக பார்க்க வில்லை. மக்களின் மனம் கவர்ந்த தலைவராகத் தான் எம்.ஜி.ஆரைப் பார்த்து வருகின்றனர். ஏனெனில் அவர் தந்த திட்டங்கள் இன்னும் நம்மோடு உள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும். அதற்கு உணவு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழை எளியவர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே அனைத்து ஜாதியினரும் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரியலாம் என உத்தரவிட்டார். விவசாயிகள் பயன் பெறுவதற்காகவே இலவச மின்சாரம் வழங்கினார். அவரது மறைவிற்குப் பின்னர் புரட்சி தலைவி அம்மா கட்சியை மீட்டெடுத்தார். புரட்சித் தலைவர் வழியிலேயே அம்மாவும் பல திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார்.
தி.மு.க. ஆட்சியில் மாநிலம் முழுவதும் மின்தடை இருந்தது. அதனை மாற்றி மின்மிகை மாநிலமாக ஆக்கிய பெருமை அம்மாவையே சாரும். அம்மா உணவகம் மூலம் குறைந்த செலவில் மனம் நிறைவாக உணவு சாப்பிட்டு செல்ல முடிகிறது. 2023 வரை தொலைநோக்கு திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்தினார். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பின்னர் கட்சி உடையும் என்றனர். ஆனால் அம்மா அதனைத் தகர்த்தெறிந்து கட்சியை காப்பாற்றினார். அம்மா மறைவிற்குப் பின்னர் ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும் என எதிர்கட்சிகள் புழுதி வாரி தூற்றினர். ஆனாhல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மாவின் கட்டளைப்படி கட்சியின் அடிமட்ட தொண்டர்களாக இருந்து உயர்ந்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் காத்து வருகின்றனர்.
அம்மா ஆட்சியின் போது பொங்கல் பரிசும் ரூ.100 பணமும் வழங்கினார். அவர் வழியில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கினர். அம்மா ஆட்சியில் ஆடு வழங்கப்பட்டது. தற்போது முதல்வரும், துணை முதல்வரும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் எ;ன்பதற்காக கட்சி பாகுபாடின்றி ஆடு  மட்டுமின்றி கோழியும் வழங்குகின்றனர். பெண்பிள்ளை படிக்க வேண்டும் என்பதற்காக தாலிக்கு 4கிராம் தங்கம் அம்மா வழங்கினார். அவரின் வழியில் முதல்வரும் துணை முதல்வரும் 8 கிராம் தங்கம் வழங்குகின்றனர். மேலும் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கி வருகின்றனர். தாய்மார்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளது தான் கழக அரசு. அம்மாவின் கனவை கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நனவாக்கி வருகின்றனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் கழக நிர்வாகிகள் பம்பரமாக மக்கள் சேவையாற்றி வருகின்றனர். இதுதான் அண்ணா தி.மு.க. என்று பேசினார். நிறைவாக பாளையம் பேரூர் கழக செயலாளர் பெருமாள் நன்றி கூறினார். ;  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து