முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்மை பயக்கும் திட்டங்களை பாராட்டுவோம்; தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம்: அமைச்சர் ஜெயகுமார்

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இருந்தால் பாராட்டுவோம், எதிரான திட்டங்கள் இருந்தால் எதிர்ப்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மீன்வளத்துறை மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெரியவரும்...

கூட்டணி குறித்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன் ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் அமைச்சர்கள் ஆகியோரின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு முடிவெடுக்கும், அதை கட்சித்தலைமை அறிவிக்கும், நான் எந்த கருத்தையும் என் இஷ்டத்திற்கு தெரிவிப்பது கிடையாது. தம்பித்துரை தொண்டராக தனது கருத்தை தெரிவித்திருக்கலாம். அதை கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ளமுடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல தேர்தல் அறிவிப்பு வந்ததும் கூட்டணி குறித்து அறிவிப்பு குறித்து அப்போது தெரியவரும். அருமை அண்ணன் ராமதாஸ் கூறியது போல கத்தரிக்காய் முளைத்தால் கடைத்தெருவுக்கு வரும். அதை போல யாரோடு யார் கூட்டணி என்பதும் தெரியவரும்.

வேரறுப்போம்...

மத்திய பட்ஜெட் குறித்த கருத்தை பொறுத்தவரை நான் அன்னப்பறவை மாதிரி. பாலையும் நீரையும் பிரித்து பார்த்து எதுநல்லது எது கெட்டது என்று பகுத்து பார்த்து ஆய்வோம். தமிழ்நாட்டுக்கு நல்லதாக இருந்தால் பாராட்டுவோம். கெட்டதாக இருந்தால் எதிர்ப்போம். பாராளுமன்றத்திலும் தமிழ்நாட்டுக்கு நன்மைப் பயக்கும் திட்டங்களை பாராட்டுவோம். தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால் வேரோடு வேரடி மண்ணாக நின்று வேரறுப்போம்.

நிறைகள் இருந்தால்...

மத்திய பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதை பற்றி கூறுகீறீர்கள். சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ பட்ஜெட் சமர்பிக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் என்று பாராட்டுவதில்லை. நாங்கள் நிறைகள் இருந்தால் பாராட்டுகிறோம். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுகிறோம். நிறைகள் குறைகள் இரண்டையும் பகுத்து பார்க்கும் திறன் கொண்டவர்கள் மக்கள், ஏப்ரல் மாதம் தேர்தல் வருகிறது. நீங்கள் சொன்னது சரியா, நான் சொன்னது சரியா என்பது உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி அப்போது கிடைத்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து