முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியே 40 இடங்களில் வெற்றிபெறும். நத்தத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்-,-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நத்தம் காந்திஜி கலையரங்கில் நடந்தது. எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் சின்னாக்கவுண்டர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஷாஜகான்,இராமராசு,நகர செயலாளர் சிவலிங்கம்,நகர் பேரவை செயலாளர் சேக்தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம்.இரா.விசுவநாதன்,மாவட்ட செயலாளர் மருதராஜ், கழக அம்மா பேரவை இணை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பேசினர்.
தொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது & நீண்ட இடைவெளிக்கு பிறகு நானும்,நத்தம் விசுவநாதனும் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி உள்ளார். அடுத்த ஆட்சியில் முதல்வராக ஸ்டாலின் வருவதாக கனவு காண்கிறார். ரூ.20 டோக்கன் கொடுத்து வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரனும் ஆட்சிக்கு வருவதாக ஆசைபடுகிறார். இவர்கள் இருவரும் கிளிஜோதிடர் போல் மக்களிடம் பேசி வருகிறார்கள். கிராமங்கள்தோறும் திமுக கிராமசபை கூட்டம் நடத்தி வருகிறது. இதனால் மக்களிடம் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லநிலையில் இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். கல்வி திட்டங்களுக்காக அரசு ஏராளமான சலுகைகளை செய்து வருகிறது. அரசின் உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் வேலைக்கு திரும்பிவிட்டார்கள். விலைவாசியை அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை எதும் ஏற்படாமல் மழை பெய்து செழிப்பாக உள்ளது. காவேரிநீர் திண்டுக்கல்,நத்தம் பகுதிக்கு முறையாக வந்து சேராததற்கு காரணம் திமுக தான். உதயநிதி ஸ்டாலின் கிராமசபை கூட்டத்திற்கு வந்துள்ளார். இவருக்கு பின்னால் தான் திமுகவின் பெரிய தலைவர்கள் எல்லாம்  அமர்ந்து இருந்தார்கள். திமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்று ஸ்டாலின் கூட்டத்தில் கூறினார். இதற்கு எதிர்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
       அதிமுக அம்மாவின் ஆட்சியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 எம்.பி.களை பெற்று வெற்றி பெற்றது. மக்களோடு கூட்டணி வைத்து இருப்பது நமது கட்சி. கூட்டணிக்கு வருபவர்கள் எல்லாம் சேர்த்து கொள்ளபடுவார்கள்.அம்மா அவர்களே பொங்கல் பரிசாக ரூ.100 கொடுத்துள்ளார். இப்போதைய முதலமைச்சர் அவர்கள் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்துள்ளார். இதை அனைத்து கட்சியினருக்கும் போய் சேர்ந்துள்ளது.  அதிமுக&வின் பலம் வலுப்பெற்று உள்ளது. நமது கட்சியில் அனைவரும் சமம். சீனிவாசனுக்கும்-விசுவநாதனுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகள் கிடையாது. எதிர்கட்சியினர் வேண்டும் என்றே பிரச்சனைகளை கிளப்பிவிடுவார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியே 40 இடங்களில் வெற்றிபெறும். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபால், நகர் பொருளாளர் சீனிவாசன், சாணார்பட்டி ஒன்றிய அம்மா பேரவை முன்னாள் இணைச்செயலாளர் சுப்பிரமணி,முன்னாள் ஒன்றியகுழு தலைவர் இன்பஜோதி சுப்பிரமணி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள்செல்வராஜ்,ஜெயலட்சுமி, சத்தியமூர்த்தி,பேரூராட்சி முன்னாள் துணைதலைவர் சேக்ஒலி,ஒன்றிய இளைஞரணி செயலாளர் உத்தமன்,இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் தாமோதரன் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து