Idhayam Matrimony

நண்பர்களின் வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தனது தொழிலதிபர் நண்பர்களின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு காலியிடங்கள் ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்டு அதில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இனி பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு துறையிலும் உள்ள காலியிடங்கள் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப இடஒதுக்கீடு அளிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்தது. உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் இதை ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘பல்கலைக்கழகங்களில் துறை ரீதியாக பேராசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பணியிட வாய்ப்புக்கள் குறையும்.பல்கலைக்கழகங்களில் நலிந்த பிரிவினருக்கான வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடி மறுக்கிறார். வளர்ச்சிப் பாதையில் இருந்து நலிந்த பிரிவினரை வெளியேற்ற முயற்சிக்கிறார். தனது தொழிலதிபர் நண்பர்களின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார்’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து