முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே உயிருடன் அரசு விளையாட வேண்டாம்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

மும்பை, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உயிருடன் அரசு விளையாட வேண்டாம் என்று ஆளும் பா.ஜனதா அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பால், லோக் அயுக்தா சட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் கடந்த புதன்கிழமை உண்ணாவிரத போராட்டதை தொடங்கினார்.  இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து கூறியதாவது:-

மராட்டிய அரசு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.சமூக ஆர்வலர்களின் உயிருடன் அரசு விளையாடக்கூடாது.

அன்னா ஹசாரே வீதியில் இறங்கி ஊழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விடுத்து. உண்ணாவிரதம் மூலமாக தனது உயிரை பணயம் வைத்துள்ளார்.தற்போது நாட்டு மக்கள் அனைவரும் மயக்க நிலையில் உள்ளனர். அவர்களை அந்த நிலையில் இருந்து வெளியேற்றவேண்டும். கங்கை நதியை சுத்தம் செய்ய வலியுறுத்தி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சமூக ஆர்வலர் ஜி.டி.அகர்வால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அரசு அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் உயிரிழக்க நேரிட்டது.எனவே உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே கைவிடவேண்டும். மக்களுக்காக வேறு வழியில் போராடவேண்டும். .இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து