முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 ஆண்டுகளுக்கு முன்னதாக போராடிய அதே இடத்தில் மம்தா மீண்டும் போராட்டம்

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, 13 ஆண்டுகளுக்கு முன்னதாக போராடிய அதே இடத்தில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார் மம்தா பானர்ஜி.

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் நள்ளிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி "நாட்டை பாதுகாக்கும்வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்திருக்கிறார்.
2006-ல் சிங்கூரில் டாடா நானோ கார் தொழிற்சாலையை எதிர்த்து மம்தா பானர்ஜி போராடினார்.

அப்போதும் கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில்தான் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். மம்தாவின் போராட்டத்துக்கு பலன் கிடைத்தது. டாடா அங்கே தொழிற்சாலை அமைப்பதில் இருந்து பின்வாங்கியது.இந்த முறை அரசியல் சாசனத்தை பாதுகாப்பது என்ற முழக்கத்துடன் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. அவர் அங்கு ஒரு பிளாஸ்டிக் சேருடன் வந்து அமர்ந்த சில மணி நேரத்திலேயே ஆதரவுக்குரலுடன் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவிட்டனர்.மம்தாவின் இந்த போராட்டத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேவா கட்சியின் ராஜ் தாக்கரே உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து