முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நிலை மோசம் - டெல்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். 

கோவா மாநிலத்தில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.இதற்கிடையே நேற்றிரவு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாகவும் கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து