முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2019      அரசியல்
Image Unavailable

அமராவதி, இனி தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் தெலுங்கு தேச கட்சிக்காக எப்போதும் திறக்காது எனப் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இது தொடர்பாக அவர்  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

 "5 ஆண்டுகளுக்கு முன்னதாக அமித்ஷா எப்படி இருந்தார் என்று நமக்குத் தெரியும். இப்போது அவருக்கு பெரும் பதவி கிடைத்துவிட்டதால் ஏதோ மகா சக்தி கிடைத்துவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவை எங்களுக்காக திறக்கவும் என்று நான் எப்போதாவது அமித் ஷாவிடம் கேட்டேனா? இல்லை வாய்க்கு வந்ததை எல்லாம் அமித்ஷா பேசுகிறார்.

மக்களவை தேர்தலுக்குப் பின்னர் மக்கள் பா.ஜ.க.வுக்கு அனைத்து கதவுகளையும் அடைத்து பதிலடி கொடுப்பார்கள். எல்லோர் மீதும் ஊழல் குற்றசாட்டை சொல்லிவருகிறது பா.ஜ.க.. ஆனால், இந்தியாவிலேயே அமித்ஷாவைப் போல் ஊழல்வாதி இல்லை. பா.ஜ.க.வைப் போல் ஊழல் கட்சியும் இல்லை. பா.ஜ.க. ஆட்சியில்தான் நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸ்கி என்று வங்கிகளைக் கொள்ளையடித்து தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடினர். ரஃபேல் ஊழலுக்கும் பா.ஜ.க.தான் காரணம்.ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. எல்லா பிரச்சினைக்கும் மற்றவர்களை குறைகூற கூடாது. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்வதாக பா.ஜ.க. சொல்கிறது. நாங்கள் மோடியை எதிர்க்கவில்லை. அவரது கொள்கைகளை எதிர்க்கிறோம்.நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிட்டது. சுயாட்சி அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து