முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல்;பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவகவுடா - எஸ்.எம்.கிருஷ்ணா போட்டி?

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவகவுடாவும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில்  முன்னாள் பிரதமரும், ம.ஜ.த தேசிய தலைவருமான தேவகவுடா ஹாசன் தொகுதியில் இருந்து  ஒக்கலிகர்கள் கணிசமாக வசிக்கும் பெங்களூரு வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அறிந்த பா.ஜ.க, தற்போது அந்தத் தொகுதி எம்.பி.யாக இருக்கும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி தேவகவுடாவுக்கு இணையாக ஒக்கலிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரும் பெங்களூரு வளர்ச்சிக்கு வித்திட்டவருமான முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நிறுத்த பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, மீண்டும் கட்சிக்கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து