முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முனைவு, கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு முனையத்தினை பிரதமர் .நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கபட்டது

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:- இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள தொழில் முனைவு, கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு முனையத்தினை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இம்முனையம் இந்திய அளவில் இன்று தொடங்கப்பட்ட 66 தொழில் முனையங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த முனையம் அழகப்பா பல்கலைக்கழத்தில் திறன் மேம்பாட்டிற்கான ஆற்றல் சார் மையமாகச் செயல்படும்.  இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 2000 பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு திறன் பயிற்சிகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர்கல்வி துறையின் முதன்மை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா ஐ.ஏ.எஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.  அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன், பதிவாளர் பேராசிரியர் ஹா.குருமல்லே~; பிரபு, பேரா.க.குருநாதன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், தனி அலுவலர் மற்றும் ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.வீ.பாலசந்திரன் மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் 250 மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.  இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திறன் மேம்பாட்டிற்கான ஆற்றல்சார் மையத்தின் இயக்குனர் முனைவர்.பூ.தர்மலிங்கம் மற்றும் கணினி மைய இயக்குனர் முனைவர்.செந்தில்ராஜன் செய்திருந்தனர்.
   இந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் உயர்கல்வி துறை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, தமிழக அரசு,  மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களையும், தொழில் முனைவு உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறது என்றும், அதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தாங்கள் சுய முன்னேற்றம் அடைவதோடு, நாட்டினுடைய முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும் என்றார்.  துணைவேந்தர் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் 5600 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், திறன் வளர்ப்பு பயிற்சி பெறும் 250 மாணவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் பங்குபெற வாய்ப்பு பெற்றது அரசு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கென முக்கியத்துவம் தருவதை உணர்ந்துகொள்ளலாம் என்றும், கற்றுக்கொடுக்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை மிகவும் சீரிய முறையில் கற்று தொழில் பயிற்சி வல்லுனராகவோ அல்லது தொழில் முனைவோராகவோ வருங்காலத்தில் சிறப்படைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ரூசா திட்டத்தின் கீழ் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டிற்கான ஆற்றல்சார் மையம் உருவாக்கப்பட்டுவருகிறது.  இதன் ஒரு பகுதியாக, பத்து திறன் பயிற்சி கூடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த திறன் மேம்பாட்டு ஆற்றல்சார் மையத்தின் மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய சிஎன்சி டெக்னீசியன், சோலார் மெக்கானிக், ஹைடெக் டிசைன் இன்ஜினியர், ஆடை வடிவமைப்பாளர், அவசர கால மருத்துவ உதவியாளர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர் போன்ற குறுகிய கால பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து, அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கக்கூடிய பல்வேறு திட்டங்களையும் வடிவமைத்துள்ளது.
 25 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 51 மாவட்டங்களில் இந்த தொழில் முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இவை அனைத்தையும் பிரதமர் ஜம்மு-கா~;மீரின் ஸ்ரீநகரிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து