முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை,பிப்.- மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள பேருந்து நிறுத்த மேற்கூரைகள், கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.  இப்பணிகளை ஆணையளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அகற்றப்பட்டு வரும் பணியினை விரைவில் முடிக்குமாறும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மாற்று வழியினை ஏற்படுத்தி பின்பு ஏற்கனவே உள்ள வழியினை அடைக்குமாறு கூறினார்.
முன்னதாக மதுரை மாநகராட்சி அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை நிலையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தையும், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையத்தையும் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தயாரிக்கப்படும் உரத்தினை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி)  .கே.ஜே.பிரவீன்குமார்,  நகரப்பொறியாளர்  அரசு, செயற்பொறியாளர் திரு.சேகர், உதவி ஆணையாளர் (வருவாய்)  ஆ.ரெங்கராஜன்,  மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள் .ஷர்புதீன், திரு.இராமசாமி (திடக்கழிவு மேலாண்மை), சுகாதார அலுவலர்  .ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து