வைரலான தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச்

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      விளையாட்டு
dinesh karthik catch 2019 02 06

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியில் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். அதேபோல், முன்ரோ 34, வில்லியம்சன் 34 ரன்கள் எடுத்தனர்.

இந்தப் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தில் மிட்செல் தூக்கி அடிக்க, அது எல்லைக் கோட்டிற்கு அருகில் சென்றது. எல்லைக் கோட்டின் நுனியில் இருந்த தினேஷ் கார்த்திக், அந்தப் பந்தினை இலாவகமாக பிடித்தார்.  ஆனால், பிடித்த வேகத்தில் அவரால் நிலையாக நிற்க முடியாமல் எல்லைக் கோட்டிற்கு வெளியே விழுந்தார். ஆனால், எப்படியோ, கையில் இருந்த பந்தினை தூக்கி மேலே வீசிவிட்டு விழுந்தார். விழுந்த அவர் உடனடியாக எழுந்து டைவ் அடித்து மீண்டும் அந்தப் பந்தினை கேட்ச் பிடித்தார். பின்னர், மூன்றாவது அம்பயரின் முடிவில் அது அவுட் என்று அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் பிடித்த இந்த கேட்ச் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து