முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்.பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் பிரியங்கா

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவை கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமித்தார். மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு உத்தரபிரதேசத்தில் காங்கிரசை பலப்படுத்தும் வகையில் உ.பி.யின் கிழக்கு பகுதி செயலாளர் பொறுப்பும் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக பிரியங்கா பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், கட்சித் தொண்டர்களை அவர் சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து