முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் வரும் 12 - ம் தேதி வாஜ்பாய் உருவப்படம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்ற மண்டபத்தில் வரும் 12-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பராத ரத்னா விருதினை வாஜ்பாய் பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை பாராளுமன்றத்தில் திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் வரும் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது. வாஜ்பாயின் உருவப் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரின் திரு உருவ படங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து