இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை டிஸ்சார்ஜ்

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      உலகம்
Baby-heart-outside-England 2019 02 08

நாட்டிங்காம், இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்ததையடுத்து, அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த டீன் வில்கின்ஸ்-நவோமி பிண்ட்லே தம்பதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இக்குழந்தை பிறக்கும்போதே நெஞ்செலும்பு இல்லாமலும், இதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தபடியும் காணப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள குயின்ஸ் மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு 14 மாத தொடர் பராமரிப்புக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து, குழந்தை  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. குழந்தை குணமடைந்ததால் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து