முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

கார்டிப், அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணம் செய்த விமானம் மாயமானதையடுத்து, தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்ப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, ஜனவரி 21 மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த ஞாயிறு காலை மாயமான விமானம் விபத்துக்குள்ளானது என கண்டறிந்தனர். இந்த விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலம்  மீட்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து