ஈராக், சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படுவார்கள்: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், ஈராக், சிரியாவில் அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும். அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘‘ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இடம் பறிபோய்விட்டது. ஐ.எஸ். அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது. அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும்.
அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments