12-ம் தேதி மீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்து, கனகதுர்கா

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      ஆன்மிகம்
Sabarimala1 2018 10 19

திருவனந்தபுரம், பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் வரும் 12-ம் தேதி மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட் அண்மையில் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனக துர்கா தனது வீட்டுக்குச் சென்றபோது, சபரிமலை விவகாரம் தொடர்பாக அவரின் மாமியாருக்கும், கனகதுர்காவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நீதிமன்றத்தின் உதவியோடு வீட்டுக்குச் சென்றார் கனகதுர்கா. அதேபோல பிந்துவும் பிரச்சினைகளைச் சந்தித்தார்.

முன்னதாக, இருவரின் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கோயிலுக்குச் சென்றதாலேயே இவர்கள் இருவரும் சமூகப் புறக்கணிப்பைச் சந்தித்து வருகின்றனர். கடைக்காரர்கள் கூட, இவர்களைத் தங்களின் கடைகளுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை.மகள் ஐயப்பனைத் தரிசித்ததற்காக, பிந்துவின் அம்மா கொலை மிரட்டலை எதிர்கொண்டுள்ளார்'' என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து