அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      அரசியல்
Kumaraswamy 28-10-2018

பெங்களூரு, கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய பொறுப்புகளை அம்மாநில முதல்வர் குமாரசாமி  வழங்கியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு, சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் முதல் மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கிடையே, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்யும் வகையில் அவர்களுக்கு முதல் மந்திரி குமாரசாமி முக்கிய பொறுப்புகள் வழங்கி உள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து