பாராளுமன்றத்தில் நிதின் கட்கரிக்கு மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்த சோனியா

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      இந்தியா
sonia-gandhi 2019 01 20

புதுடெல்லி, சாலை மற்றும் போக்குவரத்து துறை செய்த பணிகளுக்காக அத்துறை மந்திரி நிதின் கட்கரிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மக்களவையில் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் மக்களவை நேற்று கூடியது. கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பணிகள் மற்றும் தற்போது செய்துவரும் பணிகள் தொடர்பாக விளக்கமான பதில் அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அத்துறையை சேர்ந்த மந்திரி நிதின் கட்கரி, அனைத்து தொகுதிகளிலும் எனது அமைச்சகம் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது என்று கட்சி எல்லையைத் தாண்டி அனைத்து எம்.பி.க்களும் பாராட்டியுள்ளனர் என குறிப்பிட்டார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர். 
அப்போது அவையில் இருந்து எழுந்த மத்தியப்பிரதேச மாநில எம்.பி. கணேஷ் சிங், நிதின் கட்கரி அமைச்சகம் மேற்கொண்ட சிறப்பான பணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மேஜையை தட்டி நிதின் கட்கரிக்கு பாராட்டு தெரிவித்தார். அவரை தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும் பாராட்டை தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டினர். ஏற்கனவே, சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு நன்றி தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நிதின் கட்கரிக்கு நன்றி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து