மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி : தொடரையும் இழந்தது

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      விளையாட்டு
India-NZ 2019 02 08

Source: provided

ஆக்லாந்து : இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பந்துவீச்சு தேர்வு...

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. வெல்லிங்டனில் நடைபெற்ற  முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது .கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடரை இழந்தது...

இதன்படி முதலில், பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட டி-20களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்து அணி, டி-20களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 136 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித்தொடரை இந்திய மகளிர் அணி இழந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து