வாடிக்கையாளர்களை கவர ஐதராபாத்தில் செயல்படும் ரோபோ கிச்சன் ஹோட்டல்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      இந்தியா
robot serve hotel 2019 02 09

ஐதராபாத் : ஐதராபாத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் வகையில் ரோபோ கிச்சன் எனும் பெயரில் ஹோட்டல் ஒன்று ரோபோட்களை கொண்டு செயல்படுகின்றது.

ஐதராபாத்தில் ரோபோட்களைக் கொண்டு உணவு பரிமாறும் வகையில் ஹோட்டல் ஒன்று செயல்படுகின்றது.ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ‘ரோபோ கிச்சன்’ எனும் ஹோட்டல் உள்ளது. இங்கு உணவு பரிமாற ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான மெனு கார்டுக்கு பதிலாக டேப் ஒன்று கொடுக்கப்படும். அதில் உணவு வகைகள் மெனு போல் இருக்கும். அதில் தேவையான உணவை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இந்த ஆர்டர் நடமாடும் ரோபோட் மூலம் கிச்சனுக்கு கொண்டு செல்லப்படும். கிச்சனில் இருந்து உணவு தயாரானதும் அவைகளை இந்த ரோபோட்களே பரிமாறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

இந்த ஹோட்டலில் தற்போது 4 ரோபோட்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகின்றது. இவற்றிற்கு ‘அழகிய சேவை ரோபோட்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஐதராபாத்தில் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ரோபோ கிச்சனின் உரிமையாளர்களில் ஒருவரான மணிகாந்த் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து