எதிரி நாட்டு டேங்குகளை தகர்க்கும் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      இந்தியா
Helena missile success 2019 02 09

புவனேஸ்வர் : எதிரி நாட்டு டேங்குகளை தகர்க்கும் ஹெலினா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

போர்க்களத்தில் எதிரி நாட்டு ராணுவத்தின் டேங்குகளை குறி வைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணையானது. ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.  7 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணை, 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க,முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது எதிரி நாட்டு டேங்குகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகளில் மிகவும் நவீனமானதாக கருதப்படுகிறது.

இந்த ஏவுகணையானது ஒடிசாவின் பாலசோர் மாவட்ட கடற்கரையில் பரிசோதிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஹெலினா, குறிவைத்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. நாட்டின் பாதுகாப்பு துறையில் ஹெலினா முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து